cotanuradhapura@dtet.gov.lk

+94 252 222 666

Ful Logo n
Department-Logo

பரீட்சை, மதிப்பீட்டு செய்முறை

பரீட்சை, மதிப்பீட்டு செய்முறை
முழு நேர, பகுதி நேரப் பாடநெறிகளைக் கற்கும் மாணவர்களின் இறுதிப் பரீட்சை.

 

தொழினுட்பவியல் கல்லூரிகளில் / தொழினுட்பக் கல்லூரிகளில் முழு நேர, பகுதி நேரப் பாடநெறிகளைக் கற்கும் மாணவர்களின் இறுதிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தொழினுட்பக் கல்லூரி மட்டத்தில் கோரப்படும் அதே வேளை திணைக்களத்தின் பரீட்சை, மதிப்பீட்டுப் பிரிவின் ஒழுங்கமைப்பு, மேற்பார்வை, நடத்தல் ஆகியவற்றின் மீது தொழினுட்பக் கல்லூரி மட்டத்தில் பரீட்சைகளை நடத்தி, அவற்றில் சித்தியடையும் விண்ணப்பகாரர்களுக்குத் திணைக்களத்தின் மூலம் உரிய சான்றிதழ்கள் வழங்கப்படும் (இப்பரீட்சைக்கு 80% வகுப்புகளுக்குப் பங்குபற்றும் அதிபரின் விதப்புரைகள் உள்ள விண்ணப்பகாரர்கள் மாத்திரம் விண்ணப்பிக்கலாம்).

 

தேசிய தொழில் தகைமைப் பாடநெறிகளை (NVQ) கற்கும் மாணவர்களுக்காக.

 

தேசியத் தொழில் தகைமைப் பாடநெறிகளைக் (NVQ) கற்கும் மாணவர்களுக்காகப் பரீட்சை, மதிப்பீட்டுப் பிரிவினாலும் உரிய தொழினுட்பவியல் கல்லூரிகளில் / தொழினுட்பக் கல்லூரிகளில் பணிப்பாளர்களின் / அதிபர்களின் மேற்பார்வையின் கீழும் இயைபுபடுத்தலின் கீழும் மதிப்பீட்டாளர்களின் (Assessors) மூலம் செய்முறைப் பரீட்சைகள் நடத்தப்பட்டு, அவற்றின் பேறுகளின் பேரில் மூன்றாம் நிலை, தொழில் கல்வி ஆணைக்குழுவின் (TVEC) மூலம் உரிய NVQ சான்றிதழ்கள் வழங்கப்படும்.

 

குறுகிய காலப் பாடநெறிகளைக் கற்கும் மாணவர்களின் இறுதிப் பரீட்சை.

 

குறுகிய காலப் பாடநெறிகளைக் கற்கும் மாணவர்களுக்காக இறுதிப் பரீட்சை திணைக்களத்தின் பரீட்சை, மதிப்பீட்டுப் பணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ்த் தொழினுட்பக் கல்லூரி மட்டத்தில் நடத்தப்பட்டு, சித்தியடைந்த விண்ணப்பகாரர்களுக்குத் திணைக்களத்தின் பரீட்சை, மதிப்பீட்டுப் பிரிவின் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

 

வேறு நிறுவகங்களின் சேவையாளர் குழுக்களுக்காகப் பரீட்சைகளை நடத்தல்.

 

வேறு நிறுவகங்களில் சேவையாற்றும் சேவையாளர் குழுக்களுக்காக இத்திணைக்களத்தின் பரீட்சை, மதிப்பீட்டுப் பணிப்பாளரின் மேறபார்வையின் கீழ்ப் பரீட்சைகள் நடத்தப்பட்டு, அப்பிரிவின் மூலம் பேறுகள் வழங்கப்படும்.